சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் போலி ரெம்டெசிவர் மருந்துகளை தயாரித்த தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டது. அதில் மருந்து தயாரித்த 6 பேர் கும்பல் கையும் களவுமாக பிடிபட்டது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா தொற்றின் 2வது அலை நாடு முழுவதும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.தொற்று பரவல் அதிகரித்த போது, கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்ட வர்களுக்கு ரெம்டெசிவர் மருந்து கொடுக்கப்படுகிறது. இந்த மருந்து நல்ல பலன் கொடுப்பதால், இதை வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால், இந்த ரெம்டெசிவிர் மருந்துக்கும் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் அந்த மருந்து கள்ள மார்க்கெட்டில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. இதை தடுக்க அரசே ரெம்டெசிவிர் மருந்துகளை தனியார் மருத்துவமனைகளுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கியது.
இந்த நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் போலி ரெம்டெசிவிர் மருந்து பரலாவதாக நடமாடுவதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, காவல்துறையினர் மருந்து தயாரிக்கும் கும்பலை ரகசியமாக தேடி வந்தனர். அப்போது, பஞ்சாப் மாநிலரத்தின் ரோபார் பகுதியில் ஒரு கும்பல் போலி ரெம்டெசிவர் மருந்தை தயாரிப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, அந்த பகுதிக்கு சென்ற காவல் துறையினர் அங்கு திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஒரு கும்பர் மருந்து தயாரித்து வருவதை கடணடனர்.அவர்களை சுற்றி வளைத்த காவல்துறையினர், போலி மருந்து ஆலையின் உரிமையாளர் 6 பேர் கொண்ட கும்பலை கையும் களவுமாக பிடிப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து மூலப் பொருட்கள், குப்பிகள் மற்றும் ரூ.2 கோடி பணத்தை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.