சண்டிகர்

தீபாவளி, கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு தினங்களில் குறிப்பிட்ட நேரங்களில் அதுவும் பசுமை பட்டாசுகளுக்கு மட்டும் பஞ்சாப் அரசு அனுமதி அளித்துள்ளது.

தீபாவளி, கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது  பட்டாசுகள் வெடிக்கப் பல மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது.   பஞ்சாப் மாநிலத்தில் கடந்த சில ஆண்டுகளாகத் தடை விதிக்கப்பட்டு வருகிறது. சென்ற ஆண்டு விதித்த தடையால் சிறு வியாபாரிகள் ஏற்கனவே பட்டாசுகள் வாங்கி வைத்திருந்த நிலையில் கடும் இழப்பைச் சந்தித்தனர்.  

ந்த முறை பட்டாசுகளுக்குத் தடை விதிக்க வேண்டாம் எனப் பலரும் கேட்டு கொண்டனர்.  தமிழகத்தில் உள்ள சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்கள் இந்த ஒரே தொழிலை நம்பி உள்ளதால் இந்த தடை அவர்கள் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் எனத் தமிழக காங்கிரசார் மற்றும் முதல்வர் முக ஸ்டாலின் எனப் பலரும் கோரிக்கை விடுத்தனர்.  இந்நிலையில் இன்று பஞ்சாப் அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் மற்றும் குளிர்காலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு முடியாரொகள் மத்தியில் பிரச்சினை உருவாகாமல் இருக்க மாநிலம் முழுவதும் பட்டாசுகளின் உற்பத்தி, இருப்பு, விநியோகம், விற்பனை மற்றும் பயன்பாட்டுக்குத் தடை விதித்துள்ளது.   பசுமை பட்டாசுகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் ”பஞ்சாப் மாநிலத்தில்  தீபாவளியின் போது இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டும் கிறிஸ்துமஸ் அன்று இரவு 11.55 மணி முதல் நள்ளிரவு 12.30 மணி வரையிலும்  புத்தாண்டு இரவு 11.55 மணி முதல் 12.30 மணி வரையிலும் மட்டுமே பசுமைப் பட்டாசுகளை வெடிக்க அனுமதி அளிக்கப்படும்.     

இந்த பசுமை பட்டாசுகள் பேரியம் உப்புக்கள், அல்லது ஆண்டிமணி லித்தியம், மெர்குரி ஆரசனிக், ஈயம் அல்லது ஸ்ட்ரோண்டியம், குரோமேட் ஆகிய கலவைகள் பயன்படுத்தாததாக இருக்க வேண்டும்   பசுமை பட்டாசுகளைத் தவிர மற்ற பட்டாசுகளையோ குறிப்பிட்ட நேரம் தவிர மற்ற நேரங்களிலோ வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது” எனக் கூறப்பட்டுள்ளது.