டில்லி

ரும் நவம்பர் மாதத்தில் வங்கிகளுக்கு 17 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளன

கொரோனா அச்சுறுத்தலால் பணம் செலுத்துதல், ஷாப்பிங், பரிவர்த்தனை என அனைத்தும்  டிஜிட்டல் முறைக்கு மாறியுள்ளது.   இதனால் மக்களின் பெரும்பாலான பணிகள்  இணையத்திலேயே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆயினும் சில முக்கியமான  வேலைகளை  முடிக்க வங்கிக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் உள்ளதால் வங்கி செயல்படும் நாட்கள் மற்றும் நேரங்களைப் பற்றித் தெரிந்துகொள்வது மிக அவசியம் ஆகும்.

ஒவ்வொரு மாதமும் வங்கிகள் நான்கு ஞாயிறு மற்றும் இரண்டு சனிக்கிழமைகளிலும் வழக்கம் போல மூடப்படும். வங்கி விடுமுறைகள் எல்லா மாநிலங்களாலும் கடைப்பிடிக்கப்படுவதில்லை, இது ஒவ்வொரு மாநிலத்தின் வழக்கத்தின்படி மாறுபடலாம்.  வரும் நவம்பர் மாதத்தில் இந்தியா முழுவதும் உள்ள வங்கிகள் மொத்தம் 17 நாட்கள் மூடப்பட உள்ளன.

இந்திய ரிசர்வ் வங்கியின் விடுமுறை நாட்காட்டியின்படி, வார இறுதி நாட்களைத் தவிர, பண்டிகை விடுமுறைகள் சில உள்ளூர் அல்லது பிராந்திய கிளைகளுக்கு மட்டுமே. பொது விடுமுறைகள் மட்டுமே நாடு முழுவதும் உள்ள வங்கிகளால் அனுசரிக்கப்படுகின்றன. வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் அதற்கேற்ப தங்கள் பரிவர்த்தனைகளைத் திட்டமிட அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நவம்பர் மாதத்தில் வங்கி விடுமுறை நாட்கள் :

நவம்பர் 1 – கன்னட ராஜ்யோத்சவா (பெங்களூரு/இம்பால் மாநிலங்களில் மட்டும் விடுமுறை)

நவம்பர் 3 – நரக சதுர்தசி (பெங்களூரில் விடுமுறை)

நவம்பர் 4 – தீபாவளி (அகர்தலா, அகமதாபாத், ஐஸ்வால், பேலாபூர், போபால், புவனேஸ்வர், சண்டிகர், சென்னை, டேராடூன், காங்டாக், கவுகாத்தி,  ஹைதராபாத், இம்பால், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொச்சி, கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், புது டெ ல்லி, பனாஜி, பாட்னா, ராய்பூர், ராஞ்சி,  ஷில்லாங், சிம்லா, ஸ்ரீநகர் மற்றும் திருவனந்தபுரம் உள்ளிட்ட மாநிலங்களில் விடுமுறை)

நவம்பர் 5 – விக்ரம் சம்வத் புத்தாண்டு/கோவர்தன் பூஜை (அகமதாபாத், பேலாபூர், பெங்களூரு,  டேராடூன், காங்டாக், ஜெய்ப்பூர், கான்பூர்,லக்னோ, மும்பை மற்றும் நாக்பூர் மாநிலங்களில் விடுமுறை)

நவம்பர் 6 – லக்ஷ்மி பூஜை (கேங்டாக், இம்பால், கான்பூர், லக்னோ மற்றும்  சிம்லா மாநிலங்களில்  விடுமுறை)

நவம்பர் 7 – ஞாயிற்றுக்கிழமை

நவம்பர் 10 – சத் பூஜை (பாட்னா, ராஞ்சியில் விடுமுறை)

நவம்பர் 11 – சத் பூஜை (பாட்னாவில் விடுமுறை)

நவம்பர் 12 – வாங்கலா திருவிழா (ஷில்லாங்கில் விடுமுறை)

நவம்பர் 13 – இரண்டாவது சனிக்கிழமை

 

நவம்பர் 14 – ஞாயிற்றுக்கிழமை

நவம்பர் 19 – குருநானக் ஜெயந்தி/கார்த்திக் பூர்ணிமா (அய்சோல், பெலாபூர்,  போபால், சண்டிகர், டேராடூன், ஹைதராபாத், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், புது டெல்லி, ராய்பூர், ராஞ்சி, சிம்லா மற்றும் ஸ்ரீநகர் மாநிலங்களில் விடுமுறை)

நவம்பர் 21 – ஞாயிற்றுக்கிழமை

நவம்பர் 22 – கனகதாசர் ஜெயந்தி (பெங்களூருவில் விடுமுறை)

நவம்பர் 23 – செங் குட்ஸ்னெம் (ஷில்லாங்கில் விடுமுறை)

நவம்பர் 27 – நான்காவது சனிக்கிழமை

நவம்பர் 28 – ஞாயிற்றுக்கிழமை.