டில்லி

ஞ்சாப் முதல்வர் பகவந்த மான் டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்துள்ளார்.

சமீபத்தில் நடந்த பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. பஞ்சாப் சட்டப்பேரவையின் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் 92 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று பஞ்சாபில் முதன்முறையாக ஆட்சியை கைப்பற்றியது. பஞ்சாப் முதல்வராக ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பகவந்த் மான் கடந்த 16-ம் தேதி பதவியேற்றார்.

நேற்று பிரதமர் மோடியை  பகவந்த் மான்  சந்தித்துப் பேசியுள்ளார். புதிய முதல்வராக பதவியேற்றுள்ள நிலையில், மரியாதை நிமித்தமாகப் பிரதமர் மோடியை பகவந்த் மான் சந்தித்ததாகக் கூறப்படுகிறது.  இந்த சந்திப்பு  நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.

பிரதமர் மோடி பகவந்த் மானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பிறகு இருவரும் பஞ்சாப் மாநிலத்தின் வளர்ச்சி குறித்து ஆலோசித்துள்ளனர். மத்திய அரசு பஞ்சாபின் முன்னேற்றத்துக்குத் தேவையான எல்லா உதவிகளையும் வழங்கும் என பகவந்த் மானிடம் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.