புனே,

ஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி யில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 40.1 ஓவர்களில் 105 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து படுதோல்வி அடைந்தது.

ஏற்கனவே நடைபெற்ற  முதல் இன்னிங்ஸ் போட்டியில்  155 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில்,  2-வது இன்னிங்ஸ ஆடிய ஆஸ்திரேலிய அணி, 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 46 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்து, ஒட்டுமொத்தமாக 298 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

புனேவில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணியில் ரென்ஷா 68 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க, முதல் நாள் ஆட்டநேர முடிவில் 94 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்திருந்தது.

அடுத்து களமிறங்கயி  மிட்செல் ஸ்டார்க் 57, ஹேஸில்வுட் 1 ரன்னுடன் களத்தில் இருந்தனர். நேற்றும் தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி மேலும் 4 ரன்கள் சேர்த்த நிலையில் மிட்செல் ஸ்டார்க்கின் விக்கெட்டை இழந்தது. அவர் 63 பந்துகளில் 3 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 61 ரன்கள் எடுத்தார்.

இதனால் ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் 94.5 ஓவர்களில் 260 ரன்களோடு முடிவுக்கு வந்தது. ஹேஸில்வுட் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்தியத் தரப்பில் உமேஷ் யாதவ் 4 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர் களமிறங்கிய இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர்களான  முரளி விஜய்-கே.எல்.ராகுல் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 6.5 ஓவர்களில் 26 ரன்கள் சேர்த்தது.

முரளி விஜய் 10 ரன்னிலேயே  கேட்ச்  கொடுத்து வெளியேறினார். அதையடுத்து புஜாரா ஆட்டத்தை தொடங்கினார். ஆனால், 6 ரன்னில் புஜாராவும் வெளியேறினார்.

தொடர்ந்து பலத்த ஆரவாரத்துக்கிடையே கேப்டன் கோலி களத்திற்குள் புகுந்தார். ஆனால் வந்த வேகத்திலேயே டக்அவுட் ஆகி வெளியேறினார். ஆஸ்திரேலிய வீரர்  ஸ்டார்க் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் இந்திய அணி தடுமாற தொடங்கியது. தொடர்ந்து களமிறங்கி அஜிங்க்ய ரஹானே  நிதானமாக ஆட, மறுமுனையில் ஆடிய ராகுல் 84 பந்துகளில் 50 ரன்னை கடந்தார். இது சற்று ஆறுதலாக இருந்தது. ஆனால் தொடர்ந்து அவரும் பந்தை கேட்ச் கொடுத்து வெளியேற, தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து 40.1 ஓவரில் 105 ரன்னுக்கு ஆட்டமிழந்தது.

இதையடுத்து ஆஸ்திரேலியா ஆடியது.  2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 46 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்டீவன் ஸ்மித் 59, மிட்செல் மார்ஷ் 21 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

இந்தியத் தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டுளையும், ஜெயந்த் யாதவ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தற்போதைய நிலையில்  ஆஸ்திரேலிய அணி  298 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.  மேலும் இன்னும் 6 விக்கெட்டுகள்  கைவசம் உள்ளது.

ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருப்பதால் இந்திய அணி கடும் தடுமாற்றத்தை சந்தித்துள்ளது.