புல்வாமா தாக்குதலில் இறந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 5 லட்சம் : அமிதாப் உதவி

Must read

மும்பை

புல்வாமா தாக்குதலில் இறந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதி உதவி அளிக்க உள்ளதாக நடிகர் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.

புல்வாமா தாக்குதலில் கொல்லப்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களுக்கு பலரும் நிதிஉதவி அளித்து வருகின்றனர். பலர் பே டி எம் ஆப் மூலமாக உதவி உள்ளனர் சுமார் ரூ.10 கோடிக்கு மேல் இவ்வாறு நிதி உதவி கிடைத்துள்ளதாக பேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிரபல பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சனின் செய்தி தொடர்பாளர், “பல்வாமா தாக்குதலில் மரணமடைந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் குடும்பங்களுக்கு அமிதாப் பச்சன் தலா ரூ 5 லட்சம் நிதி உதவி அளிக்க உள்ளார். மரணமடைந்தோரின் குடும்பங்களுக்கு இந்த தொகையை விரைவாக வழங்குவது குறித்து அவர் பல்வேறு மாநில அரசு நிர்வாகத்தினருடன் ஆலோசனை நடத்தி வருகிறார்” என தெரிவித்துள்ளர்.

தீவிரவாத தாக்குதல் நடந்த அன்று அமிதாப் பச்சன் ஒரு நிகழ்வு ஒன்றில் கலந்துக் கொள்ள சென்றிருந்தார். கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் அறக்கட்டளை நடத்திய அந்த நிகழ்வின் போது அமிதாப் பச்சனுக்கு தீவிரவாத தாக்குதல் குறித்த செய்தி வந்தது. அவர் உடனடியாக அந்நிகழ்வை ரத்து செய்தார்.

More articles

Latest article