ஹெச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்து வரும் வலிமை படம் குறித்து அப்டேட் எதுவும் வெளியாவது இல்லை. இந்த ஆண்டு முழுவதும் வலிமை படம் அப்டேட் கேட்டு சோர்த்து விட்டார்கள் தல அஜித் ரசிகர்கள்.

அஜித்தின் பிறந்தநாள், தீபாவளி என்று எதற்குமே அப்டேட் வராமல் வலிமை படத்திற்காக அஜித் பைக் ஓட்டியபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தான் ரசிகர்கள் இந்நாள் வரை கொண்டாடி வந்தார்கள்.

இதனிடையே, தற்போது ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான புகழ் ‘வலிமை’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. புகழ், இதனை ஒரு வீடியோ பதிவில் மறைமுகமாகத் தெரிவித்துள்ளார்.

‘வலிமை’ படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடித்துவிட்டுதான், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உள்ளிட்ட விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்க படக்குழு முடிவு செய்துள்ளது.