புதுக்கோட்டை:

புதுக்கோட்டை அருகே சுமார் 3500 ஆண்டுகளுக்கு முந்தை கல் கோடாரி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் தொல்பொருள் கலைப்பொருட்களின் புதையலாக மாறி வருகிறது. சிவங்ககை அருகே கீழடியில் தமிழர்களின் சிந்துசமவெளி நாகரிகத்தை முந்தைய காலக்கட்டம் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், அறந்தாங்கி அருகே உள்ள கிராமப்பகுதியில், ஒரு கல் கோடாரி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது  3,500 ஆண்டுகளுக்கு மேலானது என்று கூறப்படுகிறது.

அறந்தாங்கி அருகே உள்ள அம்பாலதிடல் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்த கல் கோடாரியைத் தொடர்ந்து, அங்கு மேலும் ஆய்வு செய்ய தொல்பொருள் துறையினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதை முழுமையாக ஆராய்ந்தால்,  சுவாரஸ்யமான வரலாற்று உண்மைகளை அவிழ்க்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து கூறிய புதுக்கோட்டையின் தொல்பொருள் ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவர் கரு ராஜேந்திரன், பொருள் மற்றும் வடிவத்தைப் பார்த்து கல் கோடாரியின் வயது தீர்மாணிக்கப் பட்டதாகவும், இந்த கோடாரி  “குவார்ட்சைட் கல்லால் செய்யப்பட்ட வேட்டை உபகரணங்கள் என்று தெரிவித்து உள்ளார்.

இந்த உபகரணம், புதுகோட்டை பிராந்தியத்தில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறியவர், அதன்  கூர்மையான விளிம்பு உடைந்துவிட்டது, இது அதிகப்படியான பயன்பாடு காரணமாக இருக்கலாம் என்றும், தற்போது அது  “122 கிராம் எடையுடன்,  8.6-செ.மீ உயரம் உள்ளது என்றவர், இதன் மூலம் பண்டைய காலத்தில் மரங்கள் போன்றவை வெட்டப்பபட்டது என்றும் தெரிவித்தார்.