புதுச்சேரி
பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க வழிகாட்டு நெறிமுறைகளைப் புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக பொது இடங்களில் அதிகமான மக்கள் கூட மத்திய அரசு தடை விதித்துள்ளது. அவ்வகையில் வரும் 10 ஆம் தேதி அன்று நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்குத் தமிழக அரசு உள்ளிட்ட பல மாநிலங்கள் தடை விதித்துள்ளன. அதன்படி பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட கூடாது.
அண்டை மாநிலமான புதுச்சேரியில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்ய அனுமதி அளித்துள்ளது. அதற்காகப் புதுச்சேரி அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இம்மாநில அரசு விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைக்கக் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன.
புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் விநாயகர் சிலை வைக்க த்டை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் விநாயகர் சிலை வைக்க உள்ள இடத்துக்கு காவல்துறை அனுமதி கட்டாயம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர வழக்கமான கொரொனா கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.