வானிப்பூர்

நாளை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பவானிபுர் தொகுதி இடைத்தேர்தலில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய உள்ளார்.

நடந்து முடிந்த மேற்கு வங்க மாநில சட்டப்பேரவை தேர்தல் 8 கட்டங்களாக நடந்தது.  இந்த தேர்தலில் ஆளும் திருணாமுல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது.  ஆனால் அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் தோல்வி அடைந்தார்.  ஆயினும் மம்தா பானர்ஜி மேற்கு வங்க முதல்வராகப் பதவி ஏற்றார்.

அவர் 6 மாதங்களுக்குள் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்வு ஆக வேண்டிய நிலை உள்ளது.  இந்நிலையில் தேர்தல் ஆணையம் மேற்கு வங்கத்தில் காலியாக உள்ள பவானிபூர், தூங்கிபூர், சாம்சர்காஞ்ச் ஆகிய 3 தொகுதிகளுக்கு வரும் 30 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  முதல்வர் மம்தா பானர்ஜி பவானிபூர் தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவித்திருந்தார்.

இதையொட்டி 10 ஆம் தேதி அன்று மம்தா பானர்ஜி வேட்பு மனுத் தாக்கல் செய்ய உள்ளதாக தகாவல்கல் தெரிவிக்கின்றன.  இது குறித்து மம்தா பானர்ஜி, “கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது வாக்குப்பதிவு நடந்த விதம் கடவுளுக்கு மட்டுமே தெரியும். மத்திய அரசு ஏராளமான பொய் கூறியும்ம் என்னை வெல்ல முடியவில்லை. என் மீது நந்தி கிராமில் தாக்குதல் நடத்தியதன் பின்னால் சதி இருந்தது” எனத் தெரிவித்துள்ளார்.