புதுச்சேரி: புதுச்சேரி 15-வது சட்டப்பேரவையின் முதல்கூட்டத்தொடர் இன்று தொடங்கி உள்ள நிலையில், முதன்முதலாக தமிழில் உரையாற்றி வருகிறார் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன். இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் வெற்றிப்றற என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சிiய கைப்பற்றியது. மாநில முதல்வராக என்.ஆர்.ரங்கசாமி இருந்து வருகிறார். கூட்டணி அமைச்சரவை உள்ளது.
புதுச்சேரி 15-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் மற்றும் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முதல்கூட்டம் என்பதால் மரபுபடி, பொறுப்பு ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் உரையாற்றி வருகிறார். புதுச்சேரி சட்டப்பேரவை வரலாற்றில் முதன்முறையாக ஆளுநர் தமிழில் உரையாற்றி வருவது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதையடுத்து என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜவேலு, புதுச்சேரி சட்டப்பேரவை துணை சபாநாயகராக பதவி ஏற்றுக் கொள்ள உள்ளார். அதைத்தொடர்ந்து இன்று பிற்பகல், நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள், 2021-2022 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
புதுச்சேரி வரலாற்றில் முதல் முறையாக புதுச்சேரி ஆளுநர் உரையும், பட்ஜெட் தாக்கலும் ஒரே நாளில் வருவது இதுவே முதல் முறையாகும்.