புதுச்சேரி:
புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவங்குகிறது.
புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் வழக்கமாக மார்ச் மாதம் நடைபெறும். ஆனால் கடந்த பல வருடங்களாக மார்ச் மாதத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு அதன் பிறகே முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்டு மாதம் முடிய 5 மாதங்களுக்கான இடைக்கால பட்ஜெட் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் உரையுடன் தொடங்குகிறது.
பொதுவாக புதுவை சட்டசபையில் கவர்னர் உரை ஆங்கிலத்திலேயே இடம்பெறுவது வழக்கம். ஆனால் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தமிழகத்தை சேர்ந்தவர் என்பதால், தமிழிலேயே உரையாற்றுகிறார். 2-வது முறையாக அவர் சட்டசபையில் உரையாற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.