Skip to content
  • Sun. Sep 20th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
News

தமிழகத்தில் ஆகஸ்டு 1 முதல் மீண்டும் பொது போக்குவரத்து தொடங்குகிறது?

Jul 29, 2020

சென்னை:

தமிழகத்தில் சென்னை தவிர பிற மாவட்டங்களில், ஏற்கனவே தொடங்கப்பட்டது போல, பொது போக்குவரத்து ஆகஸ்டு 1ந்தேதி  தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மார்ச் 25-ந்தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், பொதுபோக்குவரத்தும் தடை செய்யப்பட்டது. இடையில், ஊரடங்கில் வழங்கப்பட்ட சில தளர்வுகள் காரணமாக, ஜூன் மாதத்தில் தமிழகத்தில் மீண்டும் பொது போக்குவரத்து சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் மண்டலம் வாரியாக தொடங்கப்பட்டது.
ஆனால், இடையில் மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்ததால் பொது போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் 6வது கட்ட ஊரடங்கும் ஜூலை 31-ந்தேதியுடன்  முடிவுக்கு வருகிறது. இதை யடுத்து, மேலும் தளர்வுகளுடன்  ஊரடங்கு நீட்டிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.  அத்துடன் மீண்டும் பொதுபோக்குவரத்தை இயக்க திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
மாவட்டங்களுக்குள்ளே அல்லது ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் பிரிக்கப்பட்டபடி, மண்டலங்களுக் குள்ளே போக்குவரத்தை இயக்க தமிழகஅரசு திட்டமிட்டு வருவதாகவும், போக்குவரத்து தொழிலாளர்களை தயாராக இருக்கும்படி அறிவுறுத்தி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
சென்னையில் அரசு ஊழியர்களுக்கு மட்டுமே சில பேருந்துகள் இயக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும், முழுமையாக போக்குவரத்தை தொடங்க மேலும் ஒரு மாதம் ஆகலாம் என்று கூறப்படுகிறருது.
ஏற்கனவே பிரிக்கப்பட்ட மண்டலங்கள் விவரம் வருமாறு
மண்டலம் 1  : கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம் மற்றும் நாமக்கல்
மண்டலம் 2 : தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் கிருஷ்ணகிரி
மண்டலம் 3:  விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி
மண்டலம் 4 : நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி,அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை
மண்டலம் 5 : திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம்
மண்டலம் 6 :  தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி
மண்டலம் 7 : காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு
மண்டலம் 8 : சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதி

Post navigation

வாங்க… எங்களோட வந்து பழகுங்க… கொரோனாவை கிண்டலடிக்கும் வீடியோ….
தமிழக ஆளுநரின்  உதவியாளருக்கு கொரோனா தொற்று…

Related Post

News

SIR: பாரத ரத்னா பேராசிரியர் சி.என்.ஆர். ராவுக்கு பெயர் முரண்பாடு தொடர்பாக நோட்டீஸ்

News இந்தியா

டெல்லியில் அதிர்ச்சி: 16 வயது மாணவிக்கு ஓடும் ஸ்லீப்பர் பேருந்தில் பாலியல் வன்கொடுமை

News

எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்துங்கள்! சிலிண்டரை பதுக்கினால் கடும் நடவடிக்கை! மத்தியஅரசு எச்சரிக்கை

உலகம்

உலகம்

மெக்காவை குறிவைத்து ஹவுத்திகள் தாக்குதல்… சவூதி அரேபியா அறிவிப்பால் உலகளவில் கொந்தளிப்பு… ‘வடிகட்டிய பழைய பொய்’ என ஹவுத்திகள் மறுப்பு

September 16, 2026 Sundar
உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer