தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மார்ச் 25-ந்தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், பொதுபோக்குவரத்தும் தடை செய்யப்பட்டது. இடையில், ஊரடங்கில் வழங்கப்பட்ட சில தளர்வுகள் காரணமாக, ஜூன் மாதத்தில் தமிழகத்தில் மீண்டும் பொது போக்குவரத்து சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் மண்டலம் வாரியாக தொடங்கப்பட்டது.
ஆனால், இடையில் மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்ததால் பொது போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் 6வது கட்ட ஊரடங்கும் ஜூலை 31-ந்தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இதை யடுத்து, மேலும் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் மீண்டும் பொதுபோக்குவரத்தை இயக்க திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
மாவட்டங்களுக்குள்ளே அல்லது ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் பிரிக்கப்பட்டபடி, மண்டலங்களுக் குள்ளே போக்குவரத்தை இயக்க தமிழகஅரசு திட்டமிட்டு வருவதாகவும், போக்குவரத்து தொழிலாளர்களை தயாராக இருக்கும்படி அறிவுறுத்தி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
சென்னையில் அரசு ஊழியர்களுக்கு மட்டுமே சில பேருந்துகள் இயக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும், முழுமையாக போக்குவரத்தை தொடங்க மேலும் ஒரு மாதம் ஆகலாம் என்று கூறப்படுகிறருது.
மண்டலம் 1 : கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம் மற்றும் நாமக்கல்
மண்டலம் 2 : தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் கிருஷ்ணகிரி
மண்டலம் 3: விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி
மண்டலம் 4 : நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி,அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை
மண்டலம் 5 : திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம்
மண்டலம் 6 : தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி
மண்டலம் 7 : காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு
மண்டலம் 8 : சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதி