சென்னை: முககவசம் அணிவதை பொதுமக்கள் இன்னும் ஒருசில மாதங்கள் கடைப்பிடிக்க வேண்டும் என கோவையில்  செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று கோயம்பத்தூர் PSG மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் NUCLEAR மருத்துவப் பிரிவு மற்றும் INTERVENTIONAL GASTRO சிகிச்சைப் பிரிவுகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து,  கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ஹீமோபிலியா எனப்படும் இரத்தம் உறையா நோய் நாள் நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் 88 கோடி ரூபாய் மதிப்பில் புதிய கட்டடங்கள் கட்டுவதற்கும் அடிக்கல் நாட்டினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, தமிழ்நாடடில் ஹீமோபீலியா நோயால் 1800 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2010-ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கலைஞர், இந்த நோயாளிகளுக்கு இலவச தடுப்பூசி திட்டத்தை துவக்கி வைத்தார். இந்த ஹீமோபீலியா பாதிக்கப்படவர்களின் கோரிக்கைகள் முதல்வரின் கவனத்திற்கு கோண்டு செல்லபட்டு நடவடிக்கை எடுக்கபடும் என்றார்.

தொடர்ந்து பேசியவர்,  தமிழகத்தில் தடுப்பூசி போடபட்டுள்ளதன் காரணமாக 82 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருக்கிறது என்றவர், கொரோனோ முடிவுக்கு வந்துவிட்டது என எடுத்துக்கொள்ள முடியாது. முகக்கவசம் அணியவேண்டியது அவசியமில்லை என்பது தொடர்பாக வெளியாக தகவல் உண்மையில்லை என்று கூறியவர்,  முக்கவசம் அணிவது ,சமூக இடைவெளி, கைகளை கழுவுவது உள்ளிட்ட விதிமுறைகளை இன்னும் ஒருசில மாதங்கள் கடைபிடிப்பது நல்லது என்று தெரிவித்தார்.