கடலூர்:  வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, கட்டமானத்துக்கு தோட்டப்பட்ட பள்ளத்திற்குள் இறங்கி போராட்டம் நடத்தியதால், பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, கட்டுமானப்பணி தற்காலிக நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளாலாரின் சத்திய ஞான சபையும், தருமச்சாலையும் உள்ளது. இங்கு மாதம்தோறும் பக்தர்களுக்கு திரை நீக்கப்பட்டு,  ஜோதி தரிசனம் காண்பிக்கப்படு கிறது. இந்த சத்திய ஞான சபை  அமைந்துள்ள பெருவெளியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதற்கு பாமக உள்பட அந்த பகுதி மக்களும்  எதிர்ப்பு தெரிவித்தன.
அனால்,  அதை கண்டுகொள்ள தமிழக அரசு,  வள்ளலார் சர்வதேச மையம் கட்டியே தீருவோம்  என கூறி, அதற்காக  ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டதுடன் கடந்த மாதம்  அடிக்கல் நாட்டு விழாவும் நடத்தப்பட்டது.

இதையடுத்து தேர்தலும் அறிவிக்கப்பட்ட நிலையில், மக்களிடையே வாக்கினை பெறும் நோக்கில்,  மையம் அமைப்பதற்கான பணி தொடங்கப்பட்டது. இதை கண்ட வள்ளலார் சபை நிர்வாகிகள், சன்மார்க்க சங்கத்தினர்கள் அந்த இடம் அமைந்துள்ள பார்வதிபுரம் கிராம மக்கள்,  பா.ம.க.வினர்  அதிர்ச்சி அடைந்தனர். இதைத்தொடர்ந்து,  பார்வதிபுரம் கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர், திடீரென அங்கு கூடி, கட்டுமான பணிக்கு வந்தவர்களை விரட்டியடித்துடன், கட்டுமானத்துக்கு தோட்டப்பட்ட பள்ளத்தில் இறங்கி போராட்டத்தை நடத்தினார்.  அப்போது, வள்ளலார் சர்வதேச மையத்தை இங்கு அமைக்கக்கூடாது, வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.  இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனால் அதிர்ச்சி அடைந்த தமிழக அரசு,  வள்ளலார் சர்வதேச கட்டுமானப்பணியை தற்காலிகமாக நிறுத்த உத்தரவிட்டு உள்ளன. நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், தற்போது பொதுமக்களின் எதிர்ப்பை எதிர்கொண்டால், அது தேர்தலில் எதிரொலிக்கும் என்பதால்,   கட்டுமான பணிகள் தற்காலிக நிறுத்தப்பட்டுள்ள