ணிலா

ரிசி விலை கடுமையாக உயர்ந்ததை எதிர்த்து பிலிப்பன்ஸ் மக்கள் போராட்டம் நடத்தி உள்ளனர்.

அண்மைக் காலமாக பிலிப்பைன்சில் அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. கடந்த டிசம்பருடன் ஒப்பிடுகையில் பணவீக்கம் உயர்ந்து 22.6 சதவீதமாக அதிகரித்துள்ளது.

அரிசி விலை இதுவரை இல்லாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அரசின் கையிருப்பில் உள்ள அரிசியைச் சட்ட விரோதமாக விற்பனை செய்ததே இதற்குக் காரணம் எனக் குற்றம் சாட்டப்படுகிறது. பொதுமக்கள் அரிசி விலையைக் குறைக்கக் கோரி பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

வேளாண் துறை அதிகாரிகளிடம்  இது குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. அரிசி விற்பனை ஊழல் தொடர்பாகத் தேசிய உணவு ஆணையத்தின் தலைவர், அதிகாரிகள் உள்பட 138 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக வேளாண்துறை அமைச்சர்  தெரிவித்துள்ளார்.