திருவனந்தபுரம்:
கேரளாவில் பரவும் புதுவகை காய்ச்சலால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில், அனைத்து விதமான கட்டுப்பாடுகளையும் மாநில அரசுகள் கைவிடலாம் என்று அண்மையில் மத்திய அரசு பரிந்துரைத்திருந்தது. இதனிடையே, நாடு முழுவதும் சில மாநிலங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கேரளா, மிசோரம், மகாராஷ்டிரா, டெல்லி, ஹரியாணா ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், தக்காளி காய்ச்சல் எனப்படும் புதிய வகை வைரஸ் கேரள மாநிலத்தில் பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டு 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகிறது. காய்ச்சல், உடல் வலி, கை, கால்கள் வெள்ளை நிறமாக மாறுதல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளை பரிசோதித்ததில் அவர்களுக்கு தக்காளி காய்ச்சல் எனப்படும் புதிய வகை வைரஸால் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

கேரள கொல்லம் மாவட்டத்தில் மட்டும் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் இதுவரை 85 குழந்தைகள் தக்காளி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.