மும்பை:
பிஎல் தொடரில் பஞ்சாப் – ராஜஸ்தான் அணிகள் இடையே நடந்த போட்டியில் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியும், லக்னோ – கொல்கத்தா அணிகள் இடையே நடந்த போட்டியில் 75 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணியும் வெற்றி பெற்றன.

பஞ்சாப் – ராஜஸ்தான் அணிகள் இடையே நடந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி, நிர்ணயிக்கப்பட்ட 5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்தது. இந்த அணியில் ஜானி பிரிஸ்டோ அதிகபட்சமாக 56 ரன்கள் அடித்தார். ராஜ்ஸ்தான பந்து வீச்சாளர்களில் யுஸ்வேந்திர சாஹல் 3 விக்கெட்டையும், பிரசித் கிருஷ்ணா, அஸ்வின் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 189 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய ராஜஸ்தான் அணி, 19.4 ஓவர்களில், நான்கு விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

லக்னோ – கொல்கத்தா அணிகள் இடையே நடந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி, 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது. 176 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய கொல்கத்தா அணி 14.3 ஓவர்களில் 101 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வி அடைந்தது.

ஐபிஎல் தொடரில் இன்று மதியம் 3.30 மணிக்கு நடக்க உள்ள போட்டியில் ஹைதாராபாத் – பெங்களூரூ அணிகளும், இரவு 7.30 மணிக்கு நடக்க உள்ள போட்டியில் சென்னை – டெல்லி அணிகளும் மோத உள்ளன.