புதுடெல்லி:
கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு குறித்து மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

வீட்டு சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்து ரூ.1,002.50-க்கு பெங்களூருவில் விற்பனை செய்யப்படுகிறது. ஆயிரம் ரூபாயை கடந்ததால் இல்லத்தரசிகள் கொதிப்படைந்து உள்ளனர்.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், 2014ம் ஆண்டில் 2 சிலிண்டர் வாங்கும் தொகை இப்போது 1 சிலிண்டர் வாங்குவதற்கு மட்டுமே போதுமானதாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.