சென்னை: பாலியல் தொல்லை கொடுத்த சென்னை பத்மாசேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் இடைநீக்கம்  செய்யப்பட்ட நிலையில், அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

சென்னை கே.கே.நகரில் உள்ள பிரபல பள்ளியான  பத்மாசேஷாத்திரி  பள்ளி  மாணவிகளுக்கு வணிவியல் ஆசிரியர் ராஜகோபாலன்  பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும், ஆன்லைன் வகுப்பு எடுக்கும்போது, அரை நிர்வாணமாக காட்சி அளித்து, பாலியல் ரீதியிலான சேட்டை செய்ததாகவும், பள்ளி மாணவிகள் பலர் புகார் தெரிவித்துள்ளனர்.

ஆசிரியர் அந்த  ராஜகோபாலன் கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார். இவர் மீது முன்னாள் மாணவர்கள் பலர் புகார் அளித்துள்ளனர். அதாவது ஆசிரியர் ராஜகோபாலன், பல ஆண்டுகளாக மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாகவும் , மாணவர்களுக்கு ஆபாச படங்களின் இணையதள பக்கங்கள் மற்றும் ஆன்லைன் வகுப்புகளில் அரைகுறை ஆடையுடன் வருவதாகவும் அவர்கள் தங்கள் புகாரில் குறிப்பிட்டுள்ளனர். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதுடன், திமுக எம்.பி.க்கள் உள்பட பல தரப்பில் இருந்து ஆசிரியர்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.

இந்த நிலையில்,  பாலியல் புகாருக்கு உள்ளான சென்னை பத்மாசேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.  ஆசிரியர் ராஜகோபால் மீதான புகார் நிரூபணமானால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளி நிர்வாகம் விளக்கமளித்தது.

இந்த விவகாரம் தொடர்பாக உடனடியா விசாரணையைத் தொடங்கிய காவல்துறை, சென்னை மடிப்பாக்கம் பகுதியிலுள்ள குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் ராஜகோபல் வீட்டுக்குச் சென்று அவரை காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

மடிப்பாக்கத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட ராஜகோபாலிடம் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் துணை ஆணையர் அலுவலகத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது.

இதுவரையில், அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.