புதுடெல்லி:
சுற்றுச்சூழலை நாம் பாதுகாக்க வேண்டும் என்று ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் வரும் இன்றுடன் நிறைவு பெற்றது. குடியரசுத் தலைவர் பொறுப்பிலிருந்து விடைபெறும் ராம்நாத் கோவிந்த் நாட்டுமக்களுக்கு உரையாற்றினார்.

அப்போது, கான்பூர் தேஹாத் மாவட்டத்தின் பாரௌன்க் கிராமத்தில் மிகவும் சாதாரண குடும்பத்தில் வளர்ந்த நான், இன்று நாட்டுமக்களாகிய உங்கள் அனைவருக்கும் முன் உரையாற்றுகிறேன். இதற்காக, நமது நாட்டின் துடிப்பான ஜனநாயக அமைப்பின் சக்திக்கு நான் தலை வணங்குகிறேன். எனது பதவிக் காலத்தில் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரிடமும் முழு ஒத்துழைப்பும், ஆதரவும், ஆசிகளும் பெற்றேன்.

நமது அன்றாட வாழ்க்கையிலும், வழக்கமான தேர்வுகளிலும், இயற்கையையும் மற்ற எல்லா உயிரினங்களையும் பாதுகாப்பதில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

21ஆம் நூற்றாண்டை இந்தியாவின் நூற்றாண்டாக மாற்றுவதற்கு நம் நாடு தயாராகி வருகிறது என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்று ராம்நாத் கோவிந்த் கூறினார்.