டில்லி:

மீப காலமாக உச்சநீதி மன்றம் பல்வேறு அதிரடி தீர்ப்புகளை வழங்கி  மக்களிடையே பரபரப்பு ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது மனைவியை விபச்சாரி என்று அழைத்த கணவரை  கொலை செய்தது குற்றம் இல்லை என்றும் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.

ஏற்கனவே கள்ளக்காதல் தவறு அல்ல என்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதி மன்றம், தற்போது மனைவியை விபச்சாரி என்று கணவர் திட்டியதால், கணவரை கொலை செய்த மனைவியின் செயல் குற்றம் கிடையாது என்றும் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.

பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் நடைபெற்ற கணவன் மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினையில், கணவர் மனைவியால் கொலை செய்யப்பபட்டார். இந்த கொலைக்கு காரணம், மனைவியை கணவர் விபச்சாரி என்று திட்டியதால், ஆத்திரமடைந்த மனைவி தனது கள்ளக்காதலுடன் இணைந்து  தனது கணவரை கொலை செய்ததாக கூறப்பட்டது.

இந்த கொலை தொடர்பாக இருவரும் கைது செய்யப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு சென்னை உயர்நீதி மன்றம் தண்டனை வழக்கி தீர்ப்பு வழங்கியது.

இதை எதிர்த்து இருவரும் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த கொலை வழக்கு நீதிபதிகள் சந்தானகவுடர், தினேஷ் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலையில்  இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அவர்கள் கீழ்க்கோர்ட்டு அளித்த தீர்ப்பை ரத்து செய்து தண்டனையையும் குறைத்தார்கள்.

நீதிபதிகள் வழங்கியுள்ள தீர்ப்பில், இதை கொலைக்குற்றமாக கருத முடியாது. மரணத்தை ஏற்படுத்திய (கோமிசைடு) குற்றமாக கருதி தான் தண்டனை வழங்க வேண்டும் என்று கூறினார்கள்.

தீர்ப்பில்,  கொலை செய்யப்பட்ட நபர் தனது மனைவியையும், மகளையும் விபச்சாரி என்று அழைத்ததை தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது, பக்கத்து வீட்டை சேர்ந்த கள்ளக் காதலனும் இணைந்து அந்த பெண்ணின் கணவரை தாக்கி  கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறார்கள்.

நமது சமுதாயத்தில் தன்னை விபச்சாரி என்று அழைப்பதை எந்த பெண்ணும் ஏற்றுக்கொள்ள மாட்டார். அந்த நிலையில் கணவரை தன்னை விபச்சாரி என்று அழைத்ததோடு, தனது மகளையும் விபச்சாரி என்று கூறியதால், அந்த பெண்ணுக்கு ஏற்பட்ட  திடீர் ஆவேசத்தால் அவர் கணவரை கொலை செய்து விட்டார். கணவரை ஆத்திரத்தில் அவர் கொலை செய்திருப்பதால் இதை கொலைக்குற்றமாக கருத முடியாது. அதே நேரத்தில் இதை மரணத்தை ஏற்படுத்திய குற்றமாக கருதி அதன் அடிப்படையில் தண்டனை வழங்க வேண்டும்.

அந்த வகையில் கீழ்க்கோர்ட்டு அளித்த தண்டனையை குறைத்து அவர்களுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கப்படுகிறது.

இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.