சென்னை: பேரிடர் காலத்தில் குடியிருப்போரிடம் வாடகை வசூலிக்க தடை செய்யும் வகையிலான சட்ட திருத்த மசோதா தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

தமிழக சட்டசபையில்  கடந்த 18-ஆம் தேதி  தொடங்கியது அன்றைய தினமே 2022-2023-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு அடுத்த நாள் 2022-2023-க்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, 21, 22 மற்றும் 23-ஆம் தேதிfளில், பட்ஜெட்  மீதான விவாதம் நடைபெற்றது.  24ந்தேதி (நேற்று)  இறுதிநாள் அமர்வில் பட்ஜெட் விவாதங்களுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தனர். அப்போது பல்வேறு சட்டதிருத்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி வீட்டு வாடகை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் மசோதாவை தாக்கல் செய்தார். அதில், பேரிடர் காலத்தில் வாடகை வீட்டில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டால், பேரிடர் காலம் முடியும்வரை, வீட்டின் உரிமையாளர் வாடகை வசூல் செய்யக்கூடாது  என திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. வீடு இடிந்து விழுந்து அல்லது வெள்ளம் சூழ்ந்து அந்த வீட்டுக்குள் வசிக்க முடியாமல் வாடகைக்கு இருப்பவர் வேறு இடத்தில் தங்க நேரிட்டால், அந்த காலகட்டத்துக்கு வாடகை வசூலிக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்த திருத்த மசோதாவை, சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

அரசின் மசோதா நடைமுறைக்கு ஒத்துவராது என்று தெரிவித்துள்ளதுடன், இனிமேல் வீடு வாடகைக்கு விடுபவர்கள் தாங்கள் போடும் ஒப்பந்தத்தில் இதையும் தெளிவுபடுத்திவிடுவார்கள், அல்லது வீட்டை முன்கூட்டியே காலி செய்துவிடுவார்கள் என்று தெரிவித்துள்ளனர்.

சட்டம் ஒரு இருட்டறை நீங்கள் சொல்வது போல் நடந்தால் அடுத்த மாதம் வீட்டை காலி பண்ண சொல்லி விடுவார்கள் நீங்கள் நல்லவர்கள் போல் மக்களை கேனையன் ஆகிவிடுவீர்கள்.

மேலும் சிலர், பேரிடர் காலங்களில் அரசு, வீட்டு வரி, தண்ணீர் வரி, மின்சாரம் போன்றவற்றை வீட்டு உரிமையாளர்களுக்கு தள்ளுபடி செய்யுமா? என்றும் கேள்வி எழுப்பி உள்ளனர்.