டெல்லி: சென்னை ஐ.ஐ.டி.யின் புதிய இயக்குனராக பேராசிரியர் காமகோடி வீழிநாதன் நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறை அறிவித்து உள்ளது.
சென்னை ஐ.ஐ.டி. இயக்குனராக இருந்த பாஸ்கர் ராமமூர்த்தி ஓய்வு பெற்றதை தொடர்ந்து அந்த பணியிடம் காலியாக இருந்தது. தற்போது காலியான இடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன. அதன்படி, தொடர்ந்து சென்னை ஐ.ஐ.டி.யின் புதிய இயக்குனராக பேராசிரியர் காமகோடி நியமிக்கப்பட்டு உள்ளார்.
டெல்லி ஐ.ஐ.டி. இயக்குனராக மும்பை ஐ.ஐ.டி. பேராசிரியர் ரங்கன் பானர்ஜி, மாண்டி ஐ.ஐ.டி. இயக்குனராகவும் கான்பூர் ஐ.ஐ.டி. பேராசிரியர் லட்சுமிதர் பெகேரா ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். மும்பை ஐ.ஐ.டி. பேராசிரியர் சுகாஸ் ஜோஷி, இந்தூர் ஐ.ஐ.டி. இயக்குனராகவும் நியமிக்கப்பட்டு உள்ளார்.