அருப்புக்கோட்டை:

மாணவிகளை தவறான பாதைக்கு அழைப்பு விடுத்த வழக்கில் கைதாகி, தற்போது ஜாமின் வெளியே வந்துள்ள பேராசிரியை நிர்மலாதேவியின் செயல்கள், அவருக்கு மனநிலை பாதிப்போ என்ற சந்தேகத்தை எழுப்பி உள்ளது.

இன்று காலை முதலே, தான் குடியிருந்து வரும் வீட்டில் இருந்து, படுக்கை, நாற்காலி உள்பட வீட்டு உபயோக பொருட்களை சாலையில் தூக்கி எறிந்தார். மேலும் வீட்டுக்கு வெளியே உள்ள கற்களால் அருகே உள்ள வீடுகள் மீதும் தூக்கி எறிந்தார். இதன் காரணமாக பக்கத்து வீட்டைச் சேர்ந்தவரின் கார் கண்ணாடி உடைந்தது.

இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், உடனே காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் சிக்கியுள்ள நிர்மலாதேவியை அவரது குடும்பத்தினர் கைவிட்ட நிலையில், அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திப்பட்டி காவியன் நகரில் நிர்மலாதேவி தனியாக வசித்து வருகிறார்.

அவ்வப்போது வழக்கு விசாரணைக்கு ஆஜராகி வரும், அவர் வித்தியாசமான முறைகளில் நடந்து கொள்கிறார். இதனால் அவருக்கு நெல்லையில் உள்ள மருத்துவமனையில்   மனநல சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில்,  இன்று அதிகாலை திடீரென  நிர்மலாதேவி, வீட்டில் இருந்த பாத்திரங்கள் மற்றும் சேர் போன்ற பொருட்களை எடுத்து ரோட்டில் வீசினார். நிர்மலாதேவி மனநல பாதிப்பால் இந்த செயலை செய்தாரா? அல்லது வேண்டுமென்றே பொருட்களை ரோட்டில் வீசினா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.