“வேந்தர் மூவிஸ்” மதனை ஆஜர் படுத்த தாயார் மனு

Must read

சென்னை: சில நாட்களுக்கு முன் மாயமான சினிமா பட தயாரிப்பாளர் மதனை நேரில் ஆஜர்படுத்த வேண்டுமென அவரது தாயார் தங்கம் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
“வேந்தர் மூவிஸ்” பட நிறுவனத்தின் அதிபர் மதன் கடந்த 29ம் தேதி, வாரணாசியில் கங்கையில் ஜலசமாதி அடையப்போவதாக கடிதம் எழுதிவைத்துவிட்டு மாயமானார். அதன் பிறகு இதுவரை அவரை தொடர்புகொள்ள முடியவில்லை.

மதன்
மதன்

இந்த நிலைியல் மதன் தாயார் தங்கம், “ மாயமான எனது மகனை ஆஜர்படுத்த போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்”  என்று ஐ கோர்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இதை  விசாரித்த நீதிபதிகள், இந்த மனு குறித்த வரும் 8 ம் தேதிக்குள் பதிலளிக்க போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளனர்.

More articles

Latest article