க்னோ

பி  மாநிலத்தில் விவசாயிகள் மீது நடந்த வன்முறைக்குக் காரணமான அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பிரியங்கா காந்தி மவுன போராட்டம் நடத்தி உள்ளார்.

உ பி மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்த வந்த விவசாயிகள் மீது கார் ஏறி 4 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதையொட்டி வெடித்த வன்முறையில் மேலும் 4 பேர் மரணம் அடைந்துள்ளனர்.   இந்த சம்பவத்தை ஏற்படுத்திய காரில் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷ் மிஸ்ரா இருந்ததாக புக்கார் எழுந்தது.    ஆனால் அதை அஜய் மிஸ்ரா மறுத்துள்ளார்.

ஆஷிஷ் மிஸ்ராவிடம் உ பி காவல்துறையினர் நடத்திய 12 மணி நேர விசாரணையின் போது அவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.  இதையொட்டி அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  அவரை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.  அமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலகக் கோரி நாடெங்கும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி இன்று உபி தலைநகர் லக்னோவில் 3 மணி  நேரம் மவுனப் போராட்டம் நடத்தி உள்ளார்.  போராட்ட முடிவில் பிரியங்கா, ”காங்கிரஸ் கட்சி இந்திய சுதந்திரத்துக்காகப் போராடி உள்ளது.  அக்கட்சி தொண்டர்கள் எதற்கும் அஞ்சக் கூடாது.   மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா மீது நடவடிக்கை எடுத்து அவரை  பதவி நீக்கம் செய்யும் வரை போராட வேண்டும்” எனக் கூறி உள்ளார்.