லக்னோ:  
த்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 20 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, பெண்களுக்கு வேலை வழங்கப்படும் எனக் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
கோரக்பூரில் நடந்த பிரதிக்யா பேரணியில் பேசிய அவர், நிஷாத் சமூகத்தினருக்கு ஆறுகள் மற்றும் மணல் அள்ளுவதில் உரிமை இருக்கும். மேலும் நாங்கள் குரு மத்ஸ்யேந்திரநாத்தின் (கோரக்நாத்தின் குரு) பெயரில் ஒரு பல்கலைக்கழகத்தை அமைப்போம்  என்றும் தெரிவித்தார்.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், தற்காலிக மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் முறைப்படுத்தப்படும் என்றும், கோதுமை மற்றும் நெல் கொள்முதல் விலை ரூ.2,500 ஆகவும், கரும்புக்கு 400 ரூபாயாகவும் உயர்த்தப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
பெண்களுக்கு ஓராண்டில் மூன்று இலவச காஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும்.  அனைவருக்கும் ரூ.10 லட்சம் வரை சிகிச்சை இலவசம். மேலும், விவசாயிகளின் முழு கடன் தள்ளுபடியை உறுதி செய்வோம். ஆஷா பணியாளர்களுக்கு மாதம் ரூ.10,000 கவுரவ ஊதியம் வழங்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.
யோகி ஆதித்யநாத் அரசு மீது கடுமையான தாக்குதலை நடத்திய அவர், முதல்வர் குரு கோரக்நாத்தின் கொள்கைகளுக்கு எதிராகச் செயல்படுகிறார் என்று கூறினார்.
பிரியங்கா மோடி அரசாங்கத்தைக் கடுமையாகச் சாடியதோடு, ‘ஹவாய் சப்பல்’ உள்ள ஒருவருக்கு விமானத்தில் பயணம் செய்ய அவர்கள் உறுதியளித்ததாகக் கூறினார். ஆனால், எரிபொருள் விலையேற்றத்தால் சாலைப் பயணம் சாத்தியமில்லாமல் போய்விட்டது. பிரதமர் தனது 8,000 கோடி விமானத்தில் இத்தாலி செல்கிறார், ஆனால் உ.பி.யில் விவசாயிகள் உரத்திற்காக வரிசையில் காத்திருந்து இறக்கின்றனர். ஒரு விவசாயியின் வருமானம் நாளொன்றுக்கு ரூ. 27 ஆனால் அவரது தொழிலதிபர் நண்பர்கள் சம்பாதிக்கிறார்கள். நாளொன்றுக்கு ரூ.1,000 கோடி” என்றார்.
மேலும் பெண்கள் வந்தால் அரசியலில் பெரும் மாற்றம் ஏற்படும் என்று பிரியங்கா கூறினார்.