டெல்லி :
காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியங்கா காந்தி வத்ரா வியாழக்கிழமை டெல்லியின் லோதி எஸ்டேட் பகுதியில் தனது அரசு பங்களாவை காலி செய்தார். மத்திய அரசு அளித்த நோட்டீஸில், ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்குள் இந்த குடியிருப்பு வளாகத்தை காலி செய்யவும் அல்லது அபராதம் விதிக்கப்படும் என்று கூறியிருந்தது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகளும், கட்சியின் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி, மத்திய டெல்லியில் உள்ள தனது புதிய வீட்டிற்குச் செல்வதற்கு முன்பு சில நாட்கள் குர்கான் பென்ட்ஹவுஸில் தங்கியிருப்பார் என்று பி.டி.ஐ. செய்தி தெரிவிக்கிறது.

டெல்லியில் உள்ள அவரது புதிய வீடு புதுப்பிக்கப்பட்டு வருவதாக பி.டி.ஐ. செய்தி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
நாட்டின் பிரதமராக இருந்த இந்திரா காந்தி மற்றும் அவரது மகனும் பிரியங்கா காந்தியின் தந்தையுமான ராஜீவ் காந்தியும் தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரது குடும்பத்திற்கு இருந்த தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக 1997-ம் ஆண்டு அவருக்கு இந்த பங்களா ஓதுக்கப்பட்டது.
இவருக்கு வழங்கப்பட்ட சிறப்பு பாதுகாப்பை முன்னதாக ரத்து செய்த பா.ஜ.க. அரசு அதையே காரணமாக கூறி இந்த மாத தொடக்கத்தில் அரசு உயர் பாதுகாப்பில் உள்ளவர்க்கே அரசு குடியிருப்பில் இருக்க முடியும் என்று கூறி இந்த மாத தொடக்கத்தில் பங்களாவை காலி செய்ய கூறி வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் அவருக்கு நோட்டீஸ் அளித்தது.
இதனைத் தொடர்ந்து இன்று தனது பங்களாவை காலி செய்த பிரியங்கா காந்தி அரசு அதிகாரிகளை அழைத்து வீட்டில் பராமரிப்பு குறை ஏதும் இருக்கிறதா என்பதை சோதனை செய்யும்படி சுற்றிக்காட்டினார், பின்னர் தனது வீட்டை காலி செய்வதை அவர்களிடம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார்.
பிரியங்கா காந்தி தனது வீட்டை அதிகாரிகளிடம் சுற்றிக்காண்பிக்கும் வீடியோ ….