ஐஸ் பக்கெட் சேலஞ்ச், கிகி சேலஞ்ச், பிட்னஸ் சேலஞ்ச், பாட்டில் மூடி சேலஞ்ச் எனப் பல்வேறு சேலஞ்ச்கள் சமூக வலைத்தளத்தில் தோன்றி மறைவது வாடிக்கை.

அந்த வகையில் தற்போது #SareeTwitter சேலஞ்ச் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. நடிகை நக்மா உள்ளிட்ட பல பிரபலங்கள், தாங்கள் புடவையில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு #SareeTwitter சேலஞ்ச்சில் பங்கேற்றிருந்தனர்.

இந்நிலையில், தன் திருமணத்தன்று காலையில் நடந்த சடங்கில் பங்கேற்றபோது, என்ற வரிகளுடன் பிரியங்கா காந்தி புடவையில் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு #SareeTwitter என்ற சவாலில் இணைந்துள்ளார்.