பலாட், சத்தீஸ்கர்
காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி பாஜக அரசு தனியாருக்கு நாட்டின் சொத்துக்களைத் தாரை வார்ப்பதாகக் கூறி உள்ளார்.
தேர்தல் ஆணையம் 90 இடங்களை கொண்ட சத்தீஷ்கார் சட்டசபைக்கு 2 கட்டங்களாகத் தேர்தல் அறிவித்துள்ளது. இன்று முதற்கட்ட தேர்தல் இன்று (நவம்பர் 7) நடைபெற்று வருகிறது. வரும் 17ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருவதால் ஆட்சியை தக்கவைக்க அக்கட்சி தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.
அதில் ஒன்றாக காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா காந்தி சத்தீஷ்காரின் பலொட் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.
இந்த கூட்டத்தில் பிரியங்கா காந்தி,
“சத்தீஸ்கரில்’கடந்த 5 ஆண்டுகளாகக் காங்கிரஸ் அரசு மக்கள் நலனுக்காக உழைத்தது., மத்திய அரசு என்ன செய்தது? பிரதமர் மோடிக்காக தலா 8 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 2 விமானங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.மேலும் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்ட 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு வரும்போது நான் உத்தரப்பிரதேசத்தில் இருந்தேன். அம்மாநிலத்தில் கரும்பு விவசாயிகள் தங்களுக்கு வழங்கப்படவேண்டிய 15 ஆயிரம் கோடி ரூபாய் பாக்கி தொகைக்காகத் தெருவில் போராடிக்கொண்டிருந்தனர்.
சுமார் 70 ஆண்டுகளாகக் காங்கிரசார் என்ன செய்தீர்கள் என்று எங்களை (பாஜக தாக்கி பேசுகிறது.
காங்கிரசால் கடந்த 70 ஆண்டுகளாகச் செய்யப்பட்ட நல்ல விஷயங்களை மத்திய பாஜக அரசு அழித்துவிடுகிறது அல்லது நாட்டின் சொத்துக்களைப் பெரிய தனியார் நிறுவனங்களிடம் தாரை வார்த்து விடுகிறது”
என்று தெரிவித்தார்.