சென்னை: கள்ளக்குறிச்சியில் மாணவி மரணத்தை தொடர்ந்து, ஏற்பட்ட வன்முறையில், தனியார் பள்ளி சூறையாடப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலை யில், தனியார் பள்ளிகள் இன்றுமுதல் இயங்காது என நேற்று அறிவித்தது. இந்த நிலையில், தனியார் பள்ளிகள் நாளைமுதல் வழக்கம்போல் இயங்கும் என தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் நிகழ்ந்த வன்முறையைக் கண்டித்து,  தமிழகம் முழுவதுமுள்ள தனியார் பள்ளிகள் இயங்காது என தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்கத் தலைவர் நந்தகுமார் நேற்று அறிவித்திருந்தார். இந்த கவலரம் தொடர்பாக, 108 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு உள்ளனர். இதற்கிடையில்,  தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு  அறிவிப்பின்படிரு சில தனியார் பள்ளிகள் மூடப்பட்டிருந்தாலும், தமிழகம் முழுவதும் 91% பள்ளிகள் வழக்கம்போல் இயங்கின என மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்கம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில்,  தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் இன்று பேச்சுவார்த்தை நடத்தியது. அதனைத் தொடர்ந்து நாளைமுதல் தனியார் பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.