சென்னை: சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் பேருந்து ஒன்று இன்று மாலை திடீரென தீப்பிடித்து எழுந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
தீபாவளி பண்டிகையையொட்டி, பொதுமக்கள் கோயம்பேட்டில் உள்ள ஆம்னி பேருந்தில் சொந்த ஊர்களுக்கு செல்ல வந்திருந்தனர். அப்போது, ஆம்னி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று திடீரென்று தீ பிடித்து எரிந்தது. இதையடுத்து, காற்றின் வேகம் காரணமாக தீ மளமளவென பரவி அருகில் நின்றுக்கொண்டிருந்த இரு பேருந்துகளும் தீப்பிடித்தன.
இதனால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்த தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். விபத்துக்கான குறித்து கோயம்பேடு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, தீப்பிடித்த பேருந்து பழுதான பேருந்து என்பதும், ஜாய் டிராவல்ஸ் என்ற நிறுவனத்துக்கு சொந்தமானது என தெரிய வந்துள்ளது. ஆனால், பேருந்து நிலையத்தின் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த மழை காலத்தில் தீப்பிடித்துஎப்படி என விசாரணை நடைபெற்று வருகின்றன.
ஏற்கனவே கடந்த ஆண்டும் ஜாய் நிறுவனத்தின் 3 தனியார் பேருந்துகள் தீப்பிடித்து எரிந்தது குறிப்பிடத்தக்கது.