டந்த மார்ச் மாதம் 15–ந் தேதி தொடங்கிய பத்தாம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 13–ந் தேதி முடிவடைந்தது. இந்த தேர்வுக்கான விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, மதிப்பெண்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணியும் முடிவடைந்தது.
a

இதைத்தொடர்ந்து தேர்வு முடிவு இன்று (புதன்கிழமை) காலை 9.31 மணிக்கு வெளியிடப்பப்பட்டது.  இதில் 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்று இரண்டு பேர் முதலிடம் பெற்றுள்ளனர்.

தமிழகம் முழுவதும் சிறைவாசிகளும் இந்தத் தேர்வை தனித்தேர்வர்களாக எழுதினர். இவர்களில்   பாளையங்கோட்டை சிறையில்  24 சிறைவாசிகள் தேர்வெழுதினர். இவர்களில் 22பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.  இங்கு சிறைவாசியாக இருக்கும்  சதிஷ் என்பவர்  389 மதிப்பெண்கள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.