சென்னை: அம்மா மினி கிளினிக்கில் பணியாற்றியவர்களுக்கு மருத்துவத் துறையில் முன்னுரிமை அளித்து பணி வழங்கப்படும் என சட்டப் பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி கூறினார்.

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் தீவிரமாக இருந்தபோது, அதை கட்டுப்படுத்த கடந்தஅதிமுக ஆட்சியில் அம்மா மினி கிளினிக் திட்டம் 2021ம் கொண்டு வரப்பட்டுது. அதன்படி, கிராமப்புறம், நகர்ப்புறங்களில் அம்மா மினி கிளினிக் அமைக்கப்பட்டது. இதில் பணி செய்வதற்காக 1,820 மருத்துவர்களும், 1,420 பன்நோக்கு மருத்துவ பகுதி நேர பணியாளர்களும் ஓராண்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான் நியமிக்கப்பட்டனர். பின்னர்  தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை பரவத் தொடங்கியதால், அவர்கள் அனைவரும்  தொடர்ந்து ரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை தொடர்பான பணிகளில் ஈடுபடுத்தப் பட்டனர்.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் ஆட்சி மாறியதும், திமுக அரசு அம்மா மினி கிளினிக் திட்டத்தை இழுத்து மூடியதுடன், அதில் பணியாற்றியவர்களையும் வீட்டு அனுப்பியது. அம்மா மினி கிளினிக்குகளில் பணியாற்றி, இப்போது மாற்றுப் பணிகளில் அமர்த்தப்பட்டுள்ள 1,820 மருத்துவர்களையும், 1,420 பன்நோக்கு மருத்துவப் பணியாளர்களையும் மார்ச் 31ம் தேதியுடன் பணி நீக்கம் செய்யும்படி தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது.

இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அரசியல் கட்சிகளும், மருத்துவ சங்கத்தினரும் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

இதுகுறித்து சட்டப்பேரவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், அம்மா மினி கிளினிக்கில் பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை அளித்து பணி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.