டில்லி:

நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ள பயந்து நாடாளுமன்றத்தை முடக்கிவிட்டு எதிர்கட்சிகள் மீது மோடி பழி சுமத்துகிறார் என்று மூத்த பத்திரிக்கையாளர் மானினி சாட்டர்ஜி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு கடந்த மார்ச் 5ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி முடிவடைந்தது. இந்த அமர்வு முழுவதும் அமளி நீடித்தது. இதனால் நாடாளுமன்றம் செயல்பட முடியாமல் போனது.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி போராடிய தெலுங்கு தேசம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தினர். இந்த இரு கட்சியினரிடமும் பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் மோடி அழைப்பு விடுக்கவில்லை. அதேபோல் அனைத்து கட்சி பிரதிநிதிகளையும் அவர் சந்திக்க மறுத்துவிட்டார்.

இந்நிலையில் நாடாளுமன்றத்தை செயல்படவிடாமல் தடுத்த எதிர்கட்சிகளை கண்டித்து பிரதமர் மோடி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்தார். பிரதமர் மோடியின் தவறை மீடியாக்கள் வெளிப்படுத்துமா? என்பது கேள்விகுறியாக உள்ளது.

இது குறித்து மூத்த பத்திரிக்கையாளர் மானினி சாட்டர்ஜி ‘தி டெலிகிராப்’ இதழலில் ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளார். அதில்,‘‘ எதிர்கட்சிகள் மீது அரசு பழியை போட எந்தளவுக்கு முயற்சிக்கிறது என்பது முக்கியமல்ல. ஒவ்வொரு எம்.பி.க்கும்., ஒவ்வொரு பார்வையாளருக்கும் அமர்வில் நடந்தது என்ன? என்பது தெரியும்.

மார்ச் 5ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி வரையிலான நாடாளுமன்ற கூட்டத்தில் தேர்தல் வெற்றிக்கு பின்னர் முதல் முறையாக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்கொள்ள பயந்து இத்தகைய தடம்புரள செய்யும் வேலையில் ஆளுங்கட்சி ஈடுபட்டது. போராட்டத்தை அனுமதித்தோ? அல்லது ஊக்குவிக்காமலோ? நாடாளுமன்ற கூட்டத்தை நீர்த்துபோகச் செய்ததன் மூலம் நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் இருந்து மோடி அரசு தப்பித்து கொண்டது.

எனினும் இந்த செயல்பாடு மூலம் ஆளும் கட்சிக்கும், அதன் தலைவர்களுக்கும் மீதமுள்ள ஆட்சி காலத்தை நடத்தி முடிப்பதில் நம்பிக்கை இல்லை என்பதை காட்டிக் கொடுத்துவிட்டனர்.