டெல்லி; பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூன் 7) மாலை 5 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை பிரதமர் அலுவலகம் அறிவித்து உள்ளது.

பிரதமர் மோடி, அடிக்கடி மான்கிபாத் நிகழ்ச்சி வாயிலாக மக்களிடையே உரையாற்றி வருகிறார். மேலும், கொரோனா அச்சுறுத்தல் காலத்திலும் மக்களிடையே பலமுறை உரையாற்றி உள்ளார். இந்த நிலையில், இன்று மாலை மீண்டும் உரையாற்ற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இன்றைய உரையில், கொரோனா 3வதுஅலை மற்றும் தடுப்பூசி குறித்து  முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா 2வது அலை நாடு முழுவதும் ஏற்படுத்திய பாதிப்புகளில், உயிரிழப்புகளும் அதிகரித்தன.  இதையடுத்து, தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக்கப்பட்டு உள்ளன. இதனிடையே கொரோனா பொதுமுடக்கம் காரணமாக சாமானிய மகக்ளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், பிரதமரின் உரை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.