லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் புதிதாக கட்டப்பட்  குஷிநகர் விமான நிலையத்தை அம்மாநில முல்வர் யோகி முன்னிலையில் பிரதமர் நரேந்திரமோடி இன்று திறந்து வைத்தார்.

உத்தப்பிரதேச மாநிலம் குஷிநகரில் 260 கோடி ரூபாய் மதிப்பில் சர்வதேச விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. இதை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், விமானபோக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதி ஆதித்யா சிந்தியா, மற்றும் ஒன்றிய அமைச்சர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

புத்தர் மகாபரி நிர்வாணா அடைந்த இடம் மற்றும் புத்தரின் யாத்திரை தலங்களைப் பார்வையிட வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கு குஷிநகர் விமான நிலையம் வசதியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையொட்டி  முதல் விமானமாக இலங்கையின் கொழும்புவில் இருந்து வரும் பயணிகள் விமானம் அங்கு தரையிறங்க உள்ளது. அந்த விமானத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட புத்த துறவிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வருகை தர உள்ளனர்.

விமான நிலைய திறப்பு விழா நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, குஷிநகர் சர்வதேச விமான நிலையம் பல தசாப்த கால நம்பிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை தற்போது நிறைவேற்றி உள்ளது.  இன்று என் மகிழ்ச்சி இரண்டு மடங்காக உள்ளது. ஆன்மீக பயணத்தில் ஆர்வமாக இருப்பதால், எனக்கு ஒரு திருப்தி உணர்வு இருக்கிறது. பூர்வாஞ்சல் பகுதியின் பிரதிநிதியாக, ஒரு உறுதிப்பாட்டை நிறைவேற்ற வேண்டிய நேரம் இது பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.