அகமதாபாத்:

குஜராத் மாநிலத்தில் ஜுனகத் (Junagadh) நகரத்தின் மெயின்ரோட்டில் சிங்கக் கூட்டங்கள் ஒன்று ஜாலியாக வலம் வரும் காட்சி தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

7 சிங்கங்கள் கொண்ட அந்த கூட்டம் சமீபத்தில் பெய்த மழையின்போது, நகரத்தின் பிரதான சாலையில் ஹயாக வலம் வருகின்றன. இதைக்கண்ட அந்த பகுதி நாய்கள் மரணஓலம் போடும் சத்தமும் எழுகின்றன. இதைக்கண்ட அந்த வழியாக வந்த நபர் ஒருவர் மறைந்திருந்து வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு உள்ளார்.  இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.‘

குஜராத்தில் வணிக தலைநகரான சவுராஷ்டிரா பகுதியிலிருந்து 100 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள ஜூனகத் நகரம். இந்த பகுதியான பிரபலமான கிர்னர்  வனவிலங்கு சரணாலயத்திற்கு அருகில் அமைந்துள்ளது, இதில் 40 க்கும் மேற்பட்ட ஆசிய சிங்கங்கள் உள்ளன. இங்கிருந்து வெளியே வரும் சிங்கங்கள் அருகிலுள்ள கிர்னார் தலெட்டி (Girnar Taleti ) சாலையில் அவ்வப்போது சுற்றித் திரிகின்றன.

இதுகுறித்து கூறிய வனத்துறை அதிகாரி,இந்த பகுதியானது சிங்கங்களின் நடைபாதை என்பதால், இங்கு சிங்கங்கள் வந்து திரும்புவது இது ஒரு இயற்கை நிகழ்வு. அவை இரவில் வெளியே வந்து மீண்டும் காட்டுக்குத் திரும்புகின்றன என்று தெரிவித்து உள்ளார்.

மேலும்,தேவைப்பட்டால் மனித-வனவிலங்கு மோதல்களைத் தவிர்ப்பதற்காக அவற்றை மீண்டும் காட்டுக்குள் விரடப்படுகிறது என்றும், ஜுனகத் வனத்துறை துணை கன்சர்வேட்டர் டாக்டர் சுனில் குமார் பெர்வால்  கூறி உள்ளார்.

குஜராத்தில் உள்ள கிர் காடு உலகின் ஆசிய சிங்கங்களின் தங்குமிடங்களில் பிரபலமான பகுதி யாகும். 2015 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட  ஆசிய சிங்கங்களின் மொத்த கணக்கெடுப்பின்படி,  குஜராத்தின் சவுராஷ்டிரா பகுதியில் உள்ள கிர் வனவிலங்கு சரணாலயத்திலும் அதைச் சுற்றியும் 523 சிங்கங்கள் இருந்தன. மொத்தம் 523 சிங்கங்களில் 33 கிர்னார் வனவிலங்கு சரணாலயத்தில் பதிவாகியுள்ளன. “கிர்னார் வனவிலங்கு சரணாலயத்திலும் அதைச் சுற்றியும் சுமார் 35 முதல் 40 சிங்கங்கள்  இருப்பதாகவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

நகரப்பகுதியில் ஹாயாக வலம் வரும் சிங்கக்கூட்டம்….