◆ நெட்டிசன் ◆
◆ அன்பழகன் முகநூல் பதிவு ◆
கொரோனா வைரஸ் நோய்த்தொற்று (COVID19)
யோகா மற்றும் இயற்கை மருத்துவம் மூலம் தடுக்கும் முறைகள் மற்றும் மேலாண்மை வழிகள் :
கொரோனா வைரஸ் (CoV) என்னும் ஒரு வகை வைரஸ் கிருமி, உடலில் இருமல் முதல் கடுமையான சுவாச நோய்கள் வரை நோய்களை ஏற்படுத்தக்கூடியது. இவை விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு பரவி உள்ளது. கொரோனா நோய்த்தொற்றின் பொதுவான அறிகுறிகள் – காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் ஆகியவை அடங்கும், தொற்று மிகவும் கடுமையாகும் போது நிமோனியா, கடுமையான சுவாச மண்டல நோய்கள், சிறுநீரக செயலிழப்பு, உயிரிழப்பு கூட நேரிடும்.
யோகா மற்றும் இயற்கை மருத்துவ முறைகள் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி, அதே நேரத்தில் ஆரோக்கியமான சளி சவ்வு படலத்தை உருவாக்கவும், பராமரிக்கவும் உதவுகிறது. இது கிருமிகளைத் தடுக்க மிகவும் அவசியம்.
இயற்க்கையாக நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சாறு :
தேவையான பொருட்கள் :
- நெல்லிக்காய் சாறு 50 மில்லி
- துளசி சாறு 50 மில்லி
- இஞ்சி சாறு 10 மில்லி
- எலுமிச்சை சாறு 5 மில்லி
- மஞ்சள் தூள் 1/4 தேக்கரண்டி
- மற்றும் குடிநீர் 150 மில்லி
மேற்குறிப்பிட்ட அனைத்து சாறுகளையும் குடிநீரில் கலந்து பின் மஞ்சள் சேர்த்து கலக்கி உடனே அருந்தவும்.
அளவு :
பெரியவர்கள் : ஒரு நாளைக்கு இரண்டு முறை 250 மில்லி
சிறியவர்கள் : ஒரு நாளைக்கு இரண்டு முறை 100 மில்லி
இயற்கையாக நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சூடான பானம் :
தேவையான பொருட்கள் :
- தோல் உரித்த இஞ்சி 5 கிராம்
- துளசி 10 கிராம்
- தூள் செய்த கருப்பு மிளகு 1/4 தேக்கரண்டி
- இடித்த அதிமதுரம் 5 கிராம் (அதிமதுர வேர்)
- மஞ்சள் தூள் 1/4 தேக்கரண்டி
- மற்றும் குடிநீர் 250 மில்லி
மேலே குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் தண்ணீரில் சேர்த்து பச்சை வாசனை நீங்கும் வரை கொதிக்க வைத்து வடிகட்டியபின் சூடாக உடனே பருகவும்.
அளவு :
பெரியவர்கள் : ஒரு நாளைக்கு இரண்டு முறை 50 மில்லி
சிறியவர்கள் : ஒரு நாளைக்கு இரண்டு முறை 20 மில்லி
உணவுகள் | ஆக்கக் கூறுகள் | நன்மைகள் |
நெல்லிக்காய் | வைட்டமின் சி | நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது |
எலுமிச்சை பழம் | வைட்டமின் சி | நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது |
இஞ்சி | ஜின்ஜெரால், ஷோகோல், ஜின்ஜிபெரோல் | அழற்சி எதிர்ப்பு தன்மை |
துளசி | யூஜெனோல், லினலோல் | சுவாசக் குழல் சுரப்பு நீக்கும் மருந்து, இருமல் அடக்கி, மூச்சுக் குழாய்த் தளர்த்தி, அழற்சி எதிர்ப்பு தன்மை, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது |
மஞ்சள் தூள் | குர்குமின் | அழற்சி எதிர்ப்பு தன்மை |
கருமிளகு | பைப்பரின் | அழற்சி எதிர்ப்பு தன்மை |
அதிமதுரம் | கிளைசிரைசிக் அமிலம் | காற்றுப்பாதையில் உள்ள செல்கள் மீது செயல்படும், வைரஸ் தொற்று மீது செயல்படும், வைரஸ் இணைப்பைத் தடுக்கும் |
யோகா சிகிச்சைகள் :
- வஜ்ராசனம்
- பஸ்திரிகா பிராணயாமம்
- பிராமரி பிராணயாமம்
- விரைவான மற்றும் ஆழமான உடல் தளர்த்தும் பயிற்சி
நாசிகளை சுத்தப்படுத்துதல் :
ஜலநேத்தி (Jala Neti) – உப்பு நீர் மூலம் நாசிகளை சுத்தம் செய்யும் பயிற்சி :
சற்று வெதுவெதுப்பான உப்பு நீரில் நமது நாசிகளை சுத்தம் செய்வது, அதிக உணர்திறனை சமன் செய்கிறது. மேலும் சுவாச கோளாறுகளின் அறிகுறிகளை நீக்குகிறது. இந்த அழுத்தமிகு நீர் கரைசல், மியூகோசல் எபிதீலியம் (mucosal epithelium) சவ்வு வழியாக நீர் போக்குவரத்தைத் தூண்டி, சளியினால் சுவாச மண்டலத்தில் உருவாகும் நீர் வீக்கத்தை குறைக்கிறது. இதன் மூலம் சளி குறைந்து அங்கிருக்கும் திசுக்கள் வழியாக வெளியேறுகிறது.
நீர் சிகிச்சைகள் :
- சூடான நீர் குடித்தல்
- சற்று வெதுவெதுப்பான நீரில் எனிமா எடுத்தல்
- வெது வெதுப்பான உப்பு நீரை கொண்டு தொண்டையில் படுமாறு வாய் கொப்பளித்தல்.
- யூகலிப்டஸ், பெப்பர்மின்ட் தைலம் போன்ற நறுமண எண்ணெயுடன் நீராவி பிடித்தல்
அக்குபங்சர் சிகிச்சைக்கான புள்ளிகள்
- நோயெதிர்ப்பு சக்தி மற்றும் வலி நிவாரணம் : LI 4, LI 11
- சுவாச கோளாறுகள் : LU 7, REN 17
- பிராணசக்தியை தூண்டும், சமச்சீர் நிலை, குமட்டல் மற்றும் வாந்திக்கான புள்ளிகள் : ST 36
சூரிய குளியல் சிகிச்சை :
தினமும் காலையிலும், மாலையிலும் 15-20 நிமிடங்கள் சூரிய குளியல் எடுப்பதினால் ஆஸ்துமா மற்றும் நுரையீரல் தொற்று போன்ற நோய்களிடமிருந்து பாதுகாப்பை ஏற்படுத்தும், சூரிய ஒளியில் இருந்து வைட்டமின் டி கிடைப்பதால், பாக்டீரியா மற்றும் வைரஸ் நோய்களை திறம்பட எதிர்த்துப் போராடும் கேத்தெலிசிடின் எனும் பாலி-பெப்டைட் ஆக்கக் கூறினை தூண்டுகிறது.
நறுமண சிகிச்சை :
- யூகலிப்டஸ் எண்ணெய் : மசாஜ் செய்ய 20 மில்லி நல்லெண்ணெய்யில் 10 துளிகள், முகர்வதற்கு கைக்குட்டையில் 1 -2 துளிகள் பயன்படுத்தலாம்.
- பெப்பர்மின்ட் எண்ணெய் : மசாஜ் செய்ய, 20 மில்லி நல்லெண்ணெய்யில் 10 துளிகள், முகர்வதற்கு கைக்குட்டையில் 1 -2 துளிகள் பயன்படுத்தலாம்.
- தைம் எண்ணெய் : மசாஜ் செய்ய, 20 மில்லி நல்லெண்ணெய்யில் 10 துளிகள் பயன்படுத்தலாம்.
தனிமனித சுகாதாரம் :
- நோய்த் தொற்றை தடுப்பதற்கான வழி முறைகள்
- நோயுற்றவர்களுடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்க்கவும்
- கூட்ட நெரிசல்கள், காற்றோட்டம் மிகவும் குறைவாக உள்ள இடங்களையும் தவிர்க்கவும்.
- கூட்டமான இடங்களுக்கு செல்லும்போது எப்போதும் முகக்கவசத்தை பயன்படுத்துங்கள்.
- சோப்பு மற்றும் தண்ணீரில் அடிக்கடி 20 விநாடிகளுக்கு ஒரு முறை கை கழுவ வேண்டும்.
- கை கழுவுதல் சாத்தியமில்லாதபோது ஆல்கஹால் அடிப்படையிலான கை சுத்திகரிப்பானை பயன்படுத்துங்கள்.
- இருமும் போதும், தும்மும் போதும் முகத்தை ஒரு கைகுட்டையினாலோ அல்லது காகிதகுட்டையினாலோ மூட வேண்டும், அதை முறையாக பின்பு அப்புறப்படுத்த வேண்டும்
- கதவு கைப்பிடிகள், சுவிட்சுகள், படி கைப்பிடிகள் மற்றும் பிற பொது மேற்பரப்புகளை கையாளுவதைக் குறைத்துகொள்ளுங்கள்
- கையுறைகளைப் பயன்படுத்துவது வைரஸ் தொடர்பைக் குறைக்கும்.
மேலும் விவரங்களுக்கு : மேல் குறிப்பிட்டுள்ள வழிகாட்டுதல்களைப் பற்றி அறிந்துக் கொள்ள அருகிலுள்ள தகுதி வாய்ந்த யோகா மற்றும் இயற்கை மருத்துவரைத் தொடர்பு கொள்ளுங்கள்.
குறிப்பு : கோவிட்-19 தொற்று நோய்க்கான அறிகுறி இருந்தால் அருகிலுள்ள அரசு மருத்துவமனை மருத்துவரை தொடர்புகொள்ளுங்கள்.