கருணாநிதி பிறந்த தினத்தை முன்னிட்டு பத்திரிக்கை அறிவிப்பு.

கலைஞரின் நூற்றாண்டு விழா!

#கலைஞர்_100

#கலைஞரிசம்

கலைஞரின் 99 வது பிறந்த நாள் ஜூன் மாதம் 3 ஆம்  தேதி வருவதை ஒட்டி, twitter இல் இயங்கிவரும் திமுக நண்பர்கள் குழு, இதை கலைஞரின் நூற்றாண்டு விழாவாக டிவிட்டர் வலைத்தளத்தில் கீவோலி (Twitter Spaces) நிகழ்வின் மூலம் விமரிசையாக கொண்டாடத் திட்டமிட்டுள்ளார்கள்.

“கலைஞரிசம்” என்று அதற்குப் பெயரிட்டு மே மாதம் 28 ஆம் தேதியிலிருந்து ஜூன் மாதம் 3 ஆம் தேதி வரை கீவெளியில் கலை இலக்கியத்தோடு பெரும் நிகழ்வாக கொண்டாடப்படவிருக்கிறது.

ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவி வகித்த திமுக தலைவர் கலைஞரின் பன்முகத் தன்மையைப் போற்றும் விதமாக இந்நிகழ்ச்சி நடைபெறும். இந்த நிகழ்ச்சி கலைஞரின் புகழை இந்திய நிலப்பரப்பு முழுவதும் பரப்பும் விதமாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய அரசியல் தலைவர்கள் இதில் பங்கெடுத்து கலைஞருக்குப் புகழ் வணக்கம் செலுத்த இருக்கிறார்கள். மாநிலங்களவை உறுப்பினர் திரு குமார் கேட்கர் கலந்து கொள்கிறார்.  தமிழ்நாட்டில் இருந்து திமுகவின்  திருச்சி சிவா MP அவர்கள் , காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. கே. எஸ். அழகிரி அவர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச் செயலாளர் திரு. வன்னி அரசு அவர்கள், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் திரு. வேல் முருகன் அவர்கள் கலந்து கொண்டு பேசுகிறார்கள். மற்ற தலைவர்களின் பங்கெடுப்பை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் உறுதிசெய்துகொண்டிருக்கிறார்கள்

விழாவில் டிவிட்டர் பயன்பாட்டாளர்கள் கலைஞரின் சாதனைகளை  பாராட்டிப்  பேசுவதுடன் கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, சிறார்களுக்கான பாட்டுப் போட்டி, ஓவியப் போட்டி  மற்றும் பேச்சுப் போட்டியும் நடத்தி பணமுடிப்பு பரிசாக அளிக்க இருக்கிறார்கள்.

மொத்தத்தில் கலைஞரின் புகழை ஒருவாரம் திக்கெட்டும் பரப்பிக் கொண்டாடவிருக்கிறார்கள்.

கலைஞரின் நூற்றாண்டு விழாகுறித்தான மேலதிக தகவல்களை அறியக் கீழ்க் காணும்  டிவிட்டர் ஐடிகளை பின்தொடரவும்

@kalaingar100

@kalaingarisam

@RajkumarMadhav5

@himeros2712

வாருங்கள் கலைஞரின் பிறந்தநாளில் அவரது புகழினை பாடுவோம்!

கலைஞரிசத்தைக் கொண்டாடுவோம்!