குடியரசு தலைவர் தேர்தல்: இபிஎஸ், ஓபிஎஸ்-ஐ சந்தித்த அண்ணாமலை, சி.டி.ரவி…

Must read

சென்னை; குடியரசு தலைவர் தேர்தலையொட்டி, இபிஎஸ், ஓபிஎஸ்-ஐ சந்தித்த மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி ஆதரவு கோரினர்.

அதிமுக பொதுக்குழு சலசலப்புகளால் ஒருமணி நேரத்தில் முடிவடைந்த நிலையில்,  பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அதிமுக கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை அவரது சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள இல்லத்தில் சென்று சந்தித்தார்.  அவருடன் பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.  இந்த சந்திப்பின்போது, குடியரசு தலைவர் தேர்தலில் அதிமுகவின் ஆதரவை கோரியதாக கூற்பபடுகிறது.

தொடர்ந்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தையும் சந்தித்து பேசினர். பாஜக வேட்பாளர் திரெளபதி முர்முவுக்கு அதிமுகவின் ஆதரவு கோரி எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ்-ஐ  பாஜக தலைவர் அண்ணாமலை, மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி ஆகியோர் சந்தித்து பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article