ராம்நாத் கோவிந்த் நாளை காஷ்மீர் பயணம்

Must read

டில்லி:

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முதல் அரசு முறை பயணமாக நாளை காஷ்மீர் மாநிலத்தில் உள்ள லடாக் பகுதிக்கு செல்கிறார்.

நாட்டின் 14-வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் கடந்த ஜூலை 25-ம் தேதி பதவி ஏற்றார். இவர் முதல் அரசு முறை பயணமாக நாளை காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதிக்கு செல்கிறார்.

ஸ்கவுட் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். லடாக்கில் 5 ராணுவ பிரிவுகளுக்கு மரியாதை அடையாள சின்னங்களை வழங்குகிறார். மேலும் லே மஹாபோதி சர்வதேச தியான மையத்துக்கும் செல்கிறார். ஜனாதிபதி வருகையையொட்டி லடாக் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

More articles

Latest article