டில்லி:

ம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கான அரசாணையை மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. 370வது சட்டப்பிரிவை நீக்கியதற்கான அரசாணையையும் மத்திய சட்டத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

பல ஆண்டுகளாக காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கி வந்த அரசியல் சாசனம் பிரிவு 370, 35ஏ ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், மறுசீரமைப்பு தொடர்பான மசோதாவும் பாராளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.

மத்திய அரசின் இந்த தீர்மானம் மற்றும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கிய நிலையில், இது தொடர்பான அரசாணை மத்திய அரசின அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.