டில்லி

கொரோனா நிவாரண நிதிக்காகத் தனது ஊதியத்தில் இன்னும் ஓராண்டுக்கு 30% அளிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முடிவு செய்துள்ளார்.

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது.  இதனால் அனைத்து வர்த்தக மற்றும் தொழில்துறை நடவடிக்கைகள் முடங்கிப் போனதால் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி உண்டாகி இருக்கிறது.  இதையொட்டி மத்திய அரசு பல அரசு செலவினங்களைக் குறைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த பல சிக்கன நடவடிக்கைகளை அறிவித்துள்ளார்.  குடியரசுத் தலைவர் முக்கிய விருந்துகள் மற்றும் விழாக்களுக்குச் செல்ல லிமோசின் சொகுசு கார் வாங்கத் திட்டமிட்டிருந்தர். தற்போது அந்த திட்டத்தை ஒதுக்கி வைத்து விட்டு தான் ஏற்கனவே பயன்படுத்தும் காரையே பயன்படுத்த முடிவு செய்துள்ளார்.

அத்துடன் குடியரசுத் தலைவர் மாளிகையில் இனி எந்த ஒரு புதிய கட்டடப்பணிகளும் நடைபெறாது என ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார்.  அத்துடன் மாலிகையில் பராமரிப்பு மற்றும் பழுது நீக்கும் ப்ணிஅக்லும் குறைக்கப்படுகின்றன எனவும் மின் சிக்கனத்துக்கான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி செல்லாகளைக் குறைக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் தனது ஒரு மாத ஊதியத்தை பி எம் கேர்ஸ் நிதிக்கு அளித்துள்ளார். அத்துடன் தந்து இன்னும் ஓராண்டுக்கான ஊதியத்தில் இருந்து கொரோனா நிவாரண நிதிக்கு 30% வழங்க முடிவு செய்துள்ளார்.