குடியரசு தலைவரை தேர்வு செய்ய போகும் கிரிமினல் எம்பி, எம்எல்ஏக்கள்

டில்லி :

ந்திய குடியரசு தலைவர் தேர்தலில் வாக்களிக்க உள்ள 4852 எம்.பி., எம்.எல்.ஏ.,க்களில் 33 சதவிகிதம் பேர் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது.

வரும் ஜூலை 17 ம் தேதி இந்திய குடியரசு தலைவர் தேர்தல் நடக்க இருக்கிறது. இதில் எம்.பி., மற்றும் எம்.எல்.ஏக்கள் வாக்களிக்க வேண்டும். இதன்படி 4852 எம்.பி., எம்.எல்.ஏ.,க்களுக்கு வாக்களிக்கும் உரிமை உண்டு.

இவர்களைக் குறித்த ஆய்வு ஒன்றை ஜனநாயக சீர்திருத்த கழகம் நடத்தி இருக்கிறது. ஆய்வுக்குப் பிறகு அக் கழகம், வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வாக்களிக்க இருக்கும் 4852 எம்.பி., எம்.எல்.ஏக்களில் 9 சதவீதம், அதாவது 451 பேர் மட்டுமே பெண்கள். லோக்சபாவில் 65 பெண் எம்.பி.,க்களும், ராஜ்யசபாவில் 23 பெண் எம்.பி.,க்களும். நாடு முழுவதும் 363 பெண் எம்.எல்.ஏ.,க்கள் பொறுப்பில் இருக்கிறார்கள்

உ.பி., மேற்குவங்கம் மற்றும் ம.பி., மாநிலங்களில்தான் அதிக பெண் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். நாகாலாந்தில் ஒரு பெண் எம்.பி.,யோ எம்.எல்.ஏ.,வோகூட இல்லை.

குடியரசு தலைவர் தேர்தலில் ஓட்டளிக்க உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.,க்களில் 33 சதவீதம் பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இவர்களில் 34 சதவீதம் பேர் லோக்சபா எம்.பி.,க்கள், 19 சதவீதம் பேர் ராஜ்யசபா எம்.பி.,க்கள், 33 சதவீதம் பேர் எம்.எல்.ஏ.,க்கள்.

20 சதவீதம் எம்.பி.,க்கள் மீது கடுமையான கிரிமினல் வழக்குகள் இருக்கின்றன.

மொத்தமுள்ள 4852 எம்.பி., எம்.எல்.ஏ.,க்களில் 71 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள்.

மேற்கண்ட கவல்கள் அவர்கள் தேர்தலின் போது தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தின் அடிப்படையில் பெறப்பட்டது” என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


English Summary
President of India will be elected by lot of Criminal MLAs and MPs