டெல்லி: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் மாநில ஆளுநர்கள் மற்றும்  துணை ஆளுநர்கள் கலந்துகொள்ளும் 51வது மாநாடு தலைநகர் டெல்லியில் இன்று தொடங்கியது.இந்த மாநாட்டில்  பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக ஆளுநர் ரவி உள்ளிட்டோர் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.

மாநில ஆளுநர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்களுக்கான மாநாடு குடியரசுத் தலைவர் தலைமையில் ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கமான நடைமுறை. கடந்த 50வது மாநாடு, 2019ஆம் ஆண்டு நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கொரோனாதொற்று காரணமாக கடந்த ஆண்டு (2020)   கொரோனா பரவல் காரணமாக நடத்தப்படவில்லை.

இந்த நிலையில், 51 ஆவது கவர்னர்கள் மாநாடு டெல்லி ஜனாதிபதி மாளிகையில்  இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாநாடு  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில், துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்பட பல அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

இந்த மாநாட்டில், அனைத்து மாநிலம் சட்ட மற்றும் ஒழுங்கு நிலவரம் உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள் பற்றி மாநாட்டில் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.