சென்னை: இரண்டு நாள் பயணமாக இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று மாலை தமிழ்நாடு வருகிறார்.

சென்னை, கடல்சார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்வதற்காக திரௌபதி முர்மு தமிழகம் வருகிறார். அதற்காக இன்று மாலை அவர் தனி விமானம் மூலம் பெங்களூர் வழியாக தமிழ்நாடு வருகிறார். அவருக்கு மிழக அரசு சார்பில் வழக்கமான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.   அதைத்தொடர்ந்து கிண்டி கவர்னர் மாளிகை செல்லும் அவர், இன்று இரவு அங்கு தங்குகிறார்.

பின்னர் நாளை குறிப்பிட்ட சில முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேசுவதால், இதனை தொடர்ந்து கடல சார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

குடியரசுத் தலைவர் சென்னை வருவதைத்தொடர்ந்து,  சென்னை மாநகர் முழுவதும்  பலத்த பாதுகாப்புகள் போடப்பட்டு உள்ளன. நேற்று  கவர்னர் மாளிகைமீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட நிலையில், இன்று அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.தப்பட்டுள்ளன.