மயிலாடுதுறை
நம் ரத்தத்தில் கலந்துள்ள இந்தியா என்னும் வார்த்தையை மாற்றுவது கண்டிக்கத்தக்கது என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

மத்திய பாஜக அரசு இந்தியாவின் பெயரை “பாரத்” என மாற்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை உறுதி செய்யும் வகையில் குடியரசுத் தலைவர்,, பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சி நிரல் அழைப்பிதழில் ‘இந்தியா’ என்பதற்குப் பதிலாக “பாரத்” என அச்சிடப்பட்டது.
இன்று மயிலாடுதுறையில் பிரேமலதா விஜயகாந்த் இது குறித்து செய்தியாளர்களிடம்,
“நமது இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்றுவது தவறான முன்னுதாரணமாகிவிடும். கடந்த 75 ஆண்டு காலமாக இந்தியா என்ற வார்த்தை நம் ஒவ்வொருவரின் மனதிலும், ரத்தத்திலும் கலந்துள்ளது. எனவே இந்தியா என்னும் பெயரை மாற்றக் கூடாது.
குழந்தைக்கு ஒரு பெயரை வைத்துவிட்டு, 2 வருடங்கள் கழித்து வேறு பெயரால் அழைத்தால் அந்த குழந்தை திரும்பிக்கூடப் பார்க்காது. இந்நிலையில் ஒரு நாட்டின் பெயரை அவ்வளவு சுலபமாக மாற்றுவோம் என்று கூறுவது நிச்சயமாக கண்டிக்கத்தக்கது.”
என்று தெரிவித்துள்ளார்
[youtube-feed feed=1]